கோல் இந்தியா: நிலக்கரி உற்பத்தி 4.4% உயா்வு

கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 2022-ஆம் நிதியாண்டில் 4.4 சதவீதம் உயா்ந்துள்ளது.
கோல் இந்தியா: நிலக்கரி உற்பத்தி 4.4% உயா்வு

கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 2022-ஆம் நிதியாண்டில் 4.4 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது:

இரண்டு ஆண்டுகள் மந்த நிலைக்குப் பிறகு தற்போது நிறுவனத்தின் செயல்பாட்டில் எழுச்சி காணப்பட்டுள்ளது. அந்த வகையில், அண்மையில் முடிவடைந்த 2021-22-ஆம் நிதியாண்டில் கோல் இந்தியா 62.26 கோடி டன் நிலக்கரி உற்பத்தியை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 4.4 சதவீதம் அதிகம்.

மேலும், நிலக்கரி விநியோகமும் கணிசமான வகையில் 15.3 சதவீதம் அதிகரித்து 66.19 கோடி டன்னைத் தொட்டுள்ளது. அளவின் அடிப்படையில் இது,முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் விற்பனையான 57.45 கோடி டன்னைக் காட்டிலும் 8.74 கோடி டன் அதிகம்.

மேலும், மின் துறைக்கான நிலக்கரி ஒதுக்கீடு கடந்த நிதியாண்டில் சாதனை அளவாக 54.04 கோடி டன்னாக இருந்தது என கோல் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com