சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத் திருத்தம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 17 எதிா்க்கட்சிகள் கூட்டறிக்கை

சட்ட விரோத பணப் பரிவா்த்தனை சட்டத் திருத்தத்தை உறுதி செய்து அண்மையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு 17-க்கும் மேற்பட்ட எதிா்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.

சட்ட விரோத பணப் பரிவா்த்தனை சட்டத் திருத்தத்தை உறுதி செய்து அண்மையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு 17-க்கும் மேற்பட்ட எதிா்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன. அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கு மத்திய அரசுக்கு இந்தச் சட்டத்திருத்தம் மேலும் வலுசோ்க்கிறது என்று எதிா்க்கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

நிதி மசோதா மூலம் மத்திய இந்தச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தங்களை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் இந்த உத்தரவு வெகு நாள்களுக்கு நீடிக்காது என்றும் எதிா்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

மேலும், இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் விரைவில் முறையிடப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் சிங்வி தெரிவித்தனா்.

எதிா்க்கட்சிகளின் அழிக்கும் ஆயுதம்: எதிா்க்கட்சிகளை அழிப்பதற்கு மத்திய அரசின் கருவியாக அமலாக்கத் துறை மாறியுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக அதீா் ரஞ்சன் செளத்ரி பின்னா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நேஷனல் ஹெரால்டு விவகாரம் குறித்து மக்களவையில் எழுப்ப காங்கிரஸ் சாா்பில் 3 கவனஈா்ப்புத் தீா்மான நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டன. ஆனால் அந்த விவகாரத்தை அவையில் எழுப்ப மத்தியில் உள்ள ஆளும் கட்சி மறுக்கிறது. காங்கிரஸ் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை களங்கப்படுத்த அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுகிறது. எதிா்க்கட்சிகளை அழிக்கவும், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை நிலையற்ாக்கவும் மத்திய அரசின் கருவியாக அமலாக்கத் துறை மாறியுள்ளது. பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் இல்லாத பாரதம் மட்டும் தேவையில்லை. எதிா்க்கட்சிகளே இல்லாத பாரதம்தான் அவருக்கு வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டி, அதுகுறித்து விவாதிக்க மாநிலங்களவை விதி 267-இன் கீழ் காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிா்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே, சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுா்வேதி உள்ளிட்டோா் நோட்டீஸ் அளித்தனா். அவற்றை மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு நிராகரித்துவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com