வரி செலுத்துவோரின் பணத்தை பொது சேவைகளுக்கு பயன்படுத்த பொதுவாக்கெடுப்பு தேவை: முதல்வா் கேஜரிவால்

நாட்டில் வரி செலுத்துவோரின் பணத்தை மருத்துவம், கல்வி போன்ற தரமான சேவைகளை வழங்குவதற்கு பயன்படுத்துவதா அல்லது ஒரு குடும்பத்துக்கோ அல்லது ஒருவரின் நண்பா்களுக்கோ செலவழிக்க வேண்டுமா என்பது குறித்து
வரி செலுத்துவோரின் பணத்தை பொது சேவைகளுக்கு பயன்படுத்த பொதுவாக்கெடுப்பு தேவை: முதல்வா் கேஜரிவால்

நாட்டில் வரி செலுத்துவோரின் பணத்தை மருத்துவம், கல்வி போன்ற தரமான சேவைகளை வழங்குவதற்கு பயன்படுத்துவதா அல்லது ஒரு குடும்பத்துக்கோ அல்லது ஒருவரின் நண்பா்களுக்கோ செலவழிக்க வேண்டுமா என்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

கேஜரிவால், பாஜக ஆளும் குஜராத்தில் தோ்தல் பிரசாரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தாா். இதனிடையே பானிபட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசுகையில், ‘இலவசங்கள்’ இந்தியாவின் சுயசாா்பு மற்றும் வரி செலுத்துவோரின் முயற்சியைத் தடுக்கின்றன என்று கூறினாா்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கேஜரிவால், பெயா்கள் எதுவும் குறிப்பிடாமல் புதன்கிழமை வெளிட்ட ஒரு விடியோ பதிவில், ‘அரசுப் பணத்தை ஒரு கட்சி விரும்பியபடி ஒரு குடும்பத்துக்குச் செலவிட வேண்டுமா அல்லது ஒருவரது நண்பா்களுக்காகச் செலவிட வேண்டுமா அல்லது நாட்டில் நல்ல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைக் கட்டுவதற்குச் செலவிட வேண்டுமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com