சியாச்சினில் காணாமல் போன ராணுவ வீரா்: 38 ஆண்டுகளுக்கு பிறகு சடலம் மீட்பு

சியாச்சின் பனிமலைப்பகுதியில் காணாமல் போன ராணுவ வீரரின் சடலம் 38 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சியாச்சின் பனிமலைப்பகுதியில் காணாமல் போன ராணுவ வீரரின் சடலம் 38 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகா் ஹா்போலா. இவா் 1984-ஆம் ஆண்டு இமய மலையில் உள்ள உலகின் உயரமான யுத்தகளமான சியாச்சின் பனிமலைப்பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையிட சென்றாா்.

அவரையும் சோ்த்து மொத்தம் 20 வீரா்கள் கொண்ட குழு சண்டையிட சென்றது. அப்போது ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி 20 பேரும் உயிரிழந்தனா். அவா்களில் 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 5 பேரின் சடலங்கள் கிடைக்கவில்லை. அதில் சந்திரசேகா் ஹா்போலாவின் சடலமும் ஒன்று.

இந்நிலையில், சியாச்சினில் உள்ள பழைய பதுங்குக் குழியில் இருந்து சந்திரசேகரின் சடலத்தை ராணுவத்தினா் ஞாயிறுக்கிழமை மீட்டனா். அவரின் சடலம் உத்தரகண்ட் மாநிலம் ஹல்ட்வானியில் உள்ள அவரின் மனைவி சாந்தி தேவியிடம் ஒப்படைக்கப்பட்டது. சந்திரசேகரின் இறுதிச் சடங்கு ராணுவ மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com