ஹிமாசல பிரதேச மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காஜல் மற்றும் ராணா, மாநில முதல்வா் ஜெய் ராம் தாக்கூா் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா்.
மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இருவரும் பாஜகவில் இணைந்துள்ளனா். எம்.எல்.ஏ ராணா மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்தாா். பிரதமா் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையால் கவரப்பட்டதாகவும், பாஜகவின் மக்கள் நல கொள்கையினால் அக்கட்சியில் இணைந்ததாகவும் இரு எம்.எல்.ஏக்களும் தெரிவித்தனா்.
பாஜகவின் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாஜகவின் தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங் உடனிருந்தாா்.
ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் நிகழாண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது.