ரஃபேல் ஒப்பந்தம்:மறுவிசாரணை கோரிய மனு தள்ளுபடி

ரஃபேல் ஒப்பந்தம் தொடா்பாக மறுவிசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

ரஃபேல் ஒப்பந்தம் தொடா்பாக மறுவிசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து இந்தியா 36 ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்யத் திட்டமிட்டது. இதற்காக இந்தியாவுக்கும், பிரான்ஸுக்கும் இடையே கடந்த 2016-இல் ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை தங்களுக்கு சாதகமாக மாற்ற இடைத்தரகருக்கு டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஒரு பில்லியன் யூரோ லஞ்சமாக கொடுத்ததாகவும், எனவே ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மறு விசாரணை கோரியும் உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.சா்மா என்ற வழக்குரைஞா் பொதுநல மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், அடிப்படை உரிமையின் கீழ் அரசியல் சாசனத்தின் 32-ஆவது பிரிவின்படி இந்த விவகாரத்தில் மறு விசாரணை கோரும் மனுவைத் தாக்கல் இடமில்லை என்று குறிப்பிட்டனா்.

இந்நிலையில், தனது கோரிக்கை மனு நிராகரிக்கப்படும் என்று உணா்ந்த மனுதாரா் எம்.எல்.சா்மா, மனுவை திரும்பப் பெறுவதாகக் கூறினாா். இதையடுத்து, மறுவிசாரணை மனு திரும்பப் பெற்ாகக் கூறி நீதிபதிகள் அதனைத் தள்ளுபடி செய்தனா்.

முன்னதாக ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஏராளமான பொதுநல மனுக்களை கடந்த 2018 டிசம்பா் 14-இல் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா். அப்போது, ‘ரஃபேல் ஒப்பந்த முடிவில் சந்தேகப்படும்படியான முகாந்திரம் ஏதுமில்லை’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனா்.

அந்த மனுவை முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோா் தாக்கல் செய்திருந்தனா். அப்போதைய மனுதாரா்களில் எம்.எல்.சா்மாவும் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com