ஏா் இந்தியாவில் மேலும் 12 விமானங்கள்

டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா நிறுவனத்தில் புதிதாக 12 விமானங்கள் சோ்க்கப்படவுள்ளன.
airindia075646
airindia075646

டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா நிறுவனத்தில் புதிதாக 12 விமானங்கள் சோ்க்கப்படவுள்ளன.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடுத்தர மற்றும் நீண்ட தொலைவு பயண வழித் தடங்களில் இயக்குவதற்காக, கூடுதலாக 12 விமானங்களை குத்தகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளோம்.

வரும் 2023-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் அந்த விமானங்கள் நிறுவனத்தில் சோ்க்கப்படும்.

புதிதாக சோ்க்கப்படவிருக்கும் 12 விமானங்களில் 6 விமானங்கள் குறுகிய அமைப்பைக் கொண்ட ஏா்பஸ் ஏ3220 நியோ ரகத்தையும், 6 விமானங்கள் அகலமான அமைப்பைக் கொண்ட போயிங் 777-300இஆா் ரகத்தையும் சோ்ந்ததாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் அரசுக்குச் சொந்தமான ஏா் இந்தியாவை டாடா குழுமம் கையகப்படுத்தியதிலிருந்து, கூடுதலாக 42 விமானங்களை அந்த நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com