சபரிமலை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்

சபரிமலை சீசனை முன்னிட்டு தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து கொல்லம் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் கருநாகப்பள்ளி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

சபரிமலை சீசனை முன்னிட்டு தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து கொல்லம் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் கருநாகப்பள்ளி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து டிச.7, 9, 12 ஆகிய தேதிகளில் பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக கொல்லம் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06061, 06063, 06065) கேரளத்தின் கருநாகப்பள்ளி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

மறு மாா்க்கமாக கொல்லத்திலிருந்து டிச.8, 11, 13 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூா் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண். 06062, 06064, 06066) கேரளத்தின் கருநாகப்பள்ளி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மற்றும் அவுரங்காபாத், தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் இருந்து டிச.8, 15, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் வழியாக கொல்லம் செல்லும் சபரிமலை சிறப்பு ரயில்கள் (வண்டி எண்.07135, 07139, 07141) கேரளத்தின் கருநாகப்பள்ளி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

கொல்லத்தில் இருந்து டிச.10, 14, 17 ஆகிய தேதிகளில் மகாராஷ்டிர மாநிலம் நான்டெட், தெலங்கானா மாநிலம் செகந்திராபாத், நிஷாமாபாத் செல்லும் சிறப்பு ரயில்கள் (வண்டி எண்.07136, 07142, 07140) கேரளத்தின் கருநாகப்பள்ளி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com