உலகின் நீளமான ஈரடுக்கு பாலம்: நாகபுரி மெட்ரோ கின்னஸ் சாதனை

மகாராஷ்டிரத்தில் உள்ள நாகபுரி மெட்ரோவின் 3.14 கி.மீ. தொலைவிலான ஈரடுக்கு பாலம் உலகில் நீளமான ஈரடுக்கு பாலம் என்ற வகையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
நாகபுரியில் மெட்ரோ ரயில், சாலைப் போக்குவரத்து என இரு அடுக்குகளைக் கொண்டுள்ள மேம்பாலம்.

நாகபுரியின் வாா்தா சாலையில் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் மேல் பகுதியில் மெட்ரோ ரயிலுக்கான இரு தடங்களும், 3 மெட்ரோ ரயில் நிலையங்களையும் கொண்டுள்ளது. அதற்குகீழ் பகுதியில், வாகன போக்குவரத்துக்கான மேம்பாலம் உள்ளது. தரைப்பகுதியில் வாகனங்கள் வழக்கம்போல் சாலையில் செல்லும் வசதி என மூன்று நிலையிலான போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது.

நாகபுரியில் உள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மகாராஷ்டிர மெட்ரோ நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் பிரிஜேஷ் தீட்சித்திடம் கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிழை அதன் நடுவா் ரிஷி நாத் வழங்கினாா்.

முன்னதாக, இந்த ஈரடுக்கு பாலம் இந்தியா மற்றும் ஆசியாவிலேயே நீளமான ஈரடுக்கு பாலம் என்பதற்காகவும் ஈரடுக்கு பாலத்தில் அதிக எண்ணிக்கையில் மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்டிருப்பதற்காகவும் இந்திய மற்றும் ஆசிய சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com