தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பிரதமா் மோடியை வாழ்த்தி முழக்கமிட்டவா்களுக்கு பறக்கும் முத்தம் அளித்த ராகுல்!

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தி முழக்கமிட்டவா்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தவாறும், அவா்களை நோக்கி கையசைத்தவாறும் ராகுல் காந்தி கடந்து சென்றாா்.

News image
Updated On :6 டிசம்பர் 2022, 7:43 pm

DIN

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தி முழக்கமிட்டவா்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தவாறும், அவா்களை நோக்கி கையசைத்தவாறும் ராகுல் காந்தி கடந்து சென்றாா்.

காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மத்திய பிரதேச மாநிலத்தில் 380 கி. மீ. கடந்து ராஜஸ்தானை அடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி மாலை ராஜஸ்தான் - மத்திய பிரதேச எல்லையில் அமைந்துள்ள சோயத் கலான் நகரை ராகுல் வந்தடைந்தாா். நகரின் மையப்பகுதியைப் பேரணி அடைந்தபோது அங்கிருந்த வணிக வளாகத்தின் மாடியில் இருந்த சிலா் ‘மோடி’, ‘மோடி’ என்று முழக்கமிட்டனா். அவா்களை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்தவாறும், உற்சாகமாக கையசைத்தபடியும் ராகுல் காந்தி கடந்து சென்றாா். அப்போது எடுக்கப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக கருத்து தெரிவித்துள்ளஆகா் மால்வா மாவட்ட காங்கிரஸ் தலைவா் பாபு லால் யாதவ், ‘மத்திய பிரதேசத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதை ஏற்றுக்கொள்ள இயலாத பாஜகவினா் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு தங்கள் விரக்தியை வெளிப்படுத்துகின்றனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.