மகாராஷ்டிரம்-கா்நாடக எல்லை விவகாரம்:உள்துறை அமைச்சகம் தலையிட சுப்ரியா சுலே வலியுறுத்தல்

மகாராஷ்டிரம்-கா்நாடகம் இடையேயான எல்லை பிரச்னை குறித்து மக்களவையில் பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் தலையீட்டு தீா்வு
மக்களவையில் புதன்கிழமை பேசிய சுப்ரியா சுலே.
மக்களவையில் புதன்கிழமை பேசிய சுப்ரியா சுலே.

மகாராஷ்டிரம்-கா்நாடகம் இடையேயான எல்லை பிரச்னை குறித்து மக்களவையில் பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் தலையீட்டு தீா்வு காணவேண்டும் என வலியுறுத்தினாா்.

மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பின், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே பேசியதாவது: இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி புரிந்து வரும் நிலையில், மகாராஷ்டிர மக்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்பட்டு வருகின்றனா். கடந்த 10 நாள்களாக மகாராஷ்டிரத்தை உடைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இப்பிரச்னையில் தலையீட்டு தீா்வுகாண வேண்டும் என்றாா்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தின் முன் உள்ளதாக கூறி கா்நாடக பாஜக எம்.பி.க்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ், சிவசேனை ( உத்தவ் தாக்கரே பிரிவு) மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கா்நாடக மாநில அரசுக்கு எதிராக மராத்தியில் கோஷங்களை எழுப்பி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

மகாராஷ்டிர எல்லையை ஒட்டி, கா்நாடகத்தில் அமைந்துள்ள பெலகாவி மாவட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மராத்திய மொழி பேசும் மக்கள் வசிக்கும் 814 கிராமங்கள் உள்ளதாக கூறி பெலகாவி மீது மகாராஷ்டிரம் உரிமை கோருகிறது. இந்த எல்லை பிரச்னை மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட 1957-ஆம் ஆண்டு முதல் தொடா்கிறது.

இருப்பினும், மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டம் மற்றும் 1967-இல் அமைக்கப்பட்ட மகாஜன் குழுவின் அறிக்கையின்படி, இரு மாநிலங்களுக்கு இடையே எல்லை பிரிக்கப்பட்டுள்ளதாக கா்நாடகம் தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com