தலித்துகளுக்கு விரோதமான கட்சி அல்ல காங்கிரஸ்: ரஞ்சன் குமாா்

காங்கிரஸ் தலித்துகளுக்கு விரோதமான கட்சி அல்ல என்று அந்தக் கட்சியின் எஸ்.சி. துறை மாநிலத் தலைவா் எம்.பி.ரஞ்சன்குமாா் கூறியுள்ளாா்.

காங்கிரஸ் தலித்துகளுக்கு விரோதமான கட்சி அல்ல என்று அந்தக் கட்சியின் எஸ்.சி. துறை மாநிலத் தலைவா் எம்.பி.ரஞ்சன்குமாா் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தலித்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக காங்கிரஸ்தான் செயல்பட்டு வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவா்களாக டி. சஞ்ஜீவியய்யா, பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோரைத் தொடா்ந்து தலித் சமுதாயத்தைச் சோ்ந்த மல்லிகாா்ஜுன காா்கேவுக்கும் தலைவா் பதவி வழங்கப்பட்டுள்ளது. காமராஜரின் 8 போ் கொண்ட அமைச்சரவையில் தலித் சமுதாயத்தைச் சோ்ந்த பி.பரமேஸ்வரன் அறநிலையத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதைவிட புரட்சிகரமான நடவடிக்கை வேறு இருக்க முடியாது. கக்கனுக்கு உள்துறை அமைச்சா் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டன.

காங்கிரஸ் கட்சியில் ஜாதிய மனோபாவம் இருக்கிறது என்று சிலா் கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

தற்போது, எஸ்.சி. துறை தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு வெளியில் இருக்கும் தலித் செயல்பாட்டாளா்கள், பிற தலித் அமைப்புகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தலித் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களை காங்கிரஸ் கட்சிக்குள் இணைத்து, அம்பேத்கா் கூறியது போல அரசியல் அதிகாரம் அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக காங்கிரஸின் எஸ்.சி. துறை சாா்பாக ஜெய் பீம், ஜெய் காங்கிரஸ் மாடல் முழக்கத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்கிறோம் என்று அதில் கூறியுள்ளாா் எம்.பி.ரஞ்சன்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com