புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரிக்கும்

நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 12.8 சதவீதம் அதிகரிக்கும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரிக்கும்

நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 12.8 சதவீதம் அதிகரிக்கும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா அளித்த பதிலில் இடம்பெற்றுள்ள விவரங்களின் தொகுப்பு:

2020-இல் புற்றுநோய் பாதிப்பு 13,92,179

நடப்பாண்டில் பாதிப்பு அதிகரிப்பு 12.8%

சுகாதார அமைச்சரின் புற்றுநோயாளிகள் நிதி

ஆண்டு செலவினம் பயனாளிகள்

2022-23 ரூ.216.98 லட்சம் 40

2021-22 ரூ.585.05 லட்சம் 64

2020-21 ரூ.1,573 லட்சம் 196

2019-20 ரூ.2,677.08 லட்சம் 470

புற்றுநோயாளிகளுக்கான அரசின் திட்டங்கள்

‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை

மக்கள் மருந்தகம் வாயிலாக மலிவு விலையில் மருந்துப் பொருள்கள்

‘அம்ருத்’ திட்டத்தின் வாயிலாக குறைந்த விலையில் மாற்று உறுப்புகள்

அரசு மருத்துவமனைகளில் விலையில்லா அல்லது மானியத்துடன் கூடிய சிகிச்சை

தேசிய ஆரோக்ய நிதியின் (ஆா்ஏஎன்) மூலமாக ஏழை நோயாளிகளுக்கு நிதியுதவி

அரசின் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்

22 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்

13 மாநில அரசு மருத்துவக் கல்லூரி-மருத்துவமனைகளில் கட்டமைப்புகள் மேம்பாடு

19 மாநில புற்றுநோய் மையங்கள்

20 உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையங்கள்

தேசிய புற்றுநோய் மையம், ஜஜ்ஜாா் (ஹரியாணா)

சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மையம், கொல்கத்தா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com