விரைவில் காசி-தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்: மத்திய அமைச்சர் அறிவிப்பு 

காசி-தமிழ்நாடு இடையே விரைவில் காசி தமிழ் சங்கமம் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவி அறிவித்துள்ளார். 
விரைவில் காசி-தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்: மத்திய அமைச்சர் அறிவிப்பு 

காசி-தமிழ்நாடு இடையே விரைவில் காசி தமிழ் சங்கமம் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். 

காசி-தமிழ்நாடு இடையேயான தொடர்பை கொண்டாடும் வகையில் மத்திய அரசின் முன்னெடுப்பில் காசி தமிழ் சங்கமம் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது இரு பகுதிகளுக்குமிடையேயான ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். 

காசி தமிழ் சங்கமத்திற்காக காசி சென்றுள்ள தமிழ்நாட்டு பிரதிநிதிகளுடன் சனிக்கிழமை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கலந்துரையாடினார். 

மேலும் வாரணாசி ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தையும் ஆய்வு செய்தார். ரயில் நிலையங்கள் விமான நிலைய முனையங்களைப் போல் இருக்க வேண்டும் என நோக்கில் வாரணாசி ரயில் நிலையம் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்தார். 

இதற்காக ரூ.7,000 கோடி செலவிடப்படும் என்றும், அடுத்த 50 ஆண்டுகளை கருத்தில் கொண்டு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com