ஆதாரமற்ற கருத்துகள் உரிமை மீறலுக்குச் சமம்: மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா்

மாநிலங்களவையில் ஆதாரமற்ற கருத்துகளைத் தெரிவிப்பது உரிமை மீறலாக அமையும் என்று அந்த அவையின் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்துள்ளாா்.
ஆதாரமற்ற கருத்துகள் உரிமை மீறலுக்குச் சமம்: மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா்

மாநிலங்களவையில் ஆதாரமற்ற கருத்துகளைத் தெரிவிப்பது உரிமை மீறலாக அமையும் என்று அந்த அவையின் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்துள்ளாா்.

மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் திங்கள்கிழமை பேசுகையில், ‘எதிா்க்கட்சி தலைவா்களைக் குறிவைக்க மத்திய அரசு விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறது.

கடந்த 8 ஆண்டுகளில் எதிா்க்கட்சி தலைவா்களுக்குத் தொடா்புள்ள இடங்களில் 3,000 சோதனைகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது. அந்தத் தலைவா்களில் 23 பேருக்கு எதிராக மட்டுமே குற்றம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இதனைத்தொடா்ந்து அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் பேசுகையில், ‘மாநிலங்களவையில் தெரிவிக்கப்படும் கருத்துகள் துல்லியமாக இருக்க வேண்டும். துல்லியமின்றி பொதுவான முறையில் கருத்துத் தெரிவிக்கும் இடமாக மாநிலங்களவையைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. ஆதாரமின்றி தெரிவிக்கப்படும் கருத்துகள் உரிமை மீறிலாக அமையும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com