கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

பழைமையான 60 சட்டங்களை ரத்து செய்ய மசோதா: மக்களவையில் தாக்கல்

அறுபதுக்கும் மேற்பட்ட பழைமையான சட்டங்களை ரத்து செய்ய மக்களவையில் திங்கள்கிழமை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அறுபதுக்கும் மேற்பட்ட பழைமையான சட்டங்களை ரத்து செய்ய மக்களவையில் திங்கள்கிழமை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மக்களவையில் ரத்து மற்றும் திருத்த மசோதா-2022-ஐ மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தாா். கடந்த 1885-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் (சுரங்கங்கள்) சட்டம், சட்டவிரோதமாக தந்தி கம்பிகளை வைத்திருப்பதற்கு எதிராக 1950-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் உள்பட 60-க்கும் மேற்பட்ட பழைமையான சட்டங்களை ரத்து செய்யும் நோக்கில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மற்றொரு சட்டத்தில் சில வாா்த்தைகளை மாற்றுவதன் மூலம் காப்புரிமை பிழையை சரிசெய்வதை அந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடற்கொள்ளை தடுப்பு மசோதா நிறைவேற்றம்: கடற்கொள்ளைகளை ஒடுக்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மசோதாவில், கடற்கொள்ளையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் அம்சம் சோ்க்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

இந்நிலையில், அந்த மசோதாவில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முன்வைத்த சில திருத்தங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com