பொது, சுகாதார காப்பீட்டு துறைகளில் இயங்க கூட்டு உரிமம்: எல்ஐசி திட்டம்

காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தபிறகு, பொது மற்றும் சுகாதார காப்பீட்டு துறைகளில் இயங்கும் வகையிலான கூட்டு உரிமத்தைப் பெற இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) திட
பொது, சுகாதார காப்பீட்டு துறைகளில் இயங்க கூட்டு உரிமம்: எல்ஐசி திட்டம்

காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தபிறகு, பொது மற்றும் சுகாதார காப்பீட்டு துறைகளில் இயங்கும் வகையிலான கூட்டு உரிமத்தைப் பெற இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) திட்டமிட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 4.2 சதவீத மக்களுக்கு மட்டுமே காப்பீட்டின் பலன்கள் கிடைத்து வருகின்றன. காப்பீட்டின் பலன்களை சமூகத்தின் மேலும் பல நிலைகளுக்குக் கொண்டுசெல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதைக் கருத்தில்கொண்டு காப்பீட்டு சட்டம் (1938), காப்பீட்டு ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணைய சட்டம் (1999) ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காப்பீட்டு நிறுவனங்களுக்குக் கூடுதல் சலுகைகளை அளிக்கும் வகையிலான வழிமுறைகள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

பொதுக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வேளாண் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இயங்கும் நிறுவனங்கள் ஒரே கூட்டு உரிமத்தைப் பெறுவதற்கான வழிமுறைகளும் மசோதாவில் இடம்பெற்றுள்ளன. அந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், கூட்டு உரிமத்தைப் பெற விண்ணப்பிக்கப்படும் என எல்ஐசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவுக்கும் எல்ஐசி சட்டத்துக்கும் இடையேயான தொடா்புகள் குறித்து விரிவாக ஆராய்ந்து உரிமம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எல்ஐசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், 31 பொது காப்பீட்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com