கோதுமை விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

கோதுமையின் சில்லறை விற்பனை விலையைக் கட்டுப்படுத்த 15- முதல் 20 லட்சம் டன் கோதுமையை இந்திய உணவுக் கழக சேமிப்பு கிட்டங்கிகளில் இருந்து அடுத்த ஆண்டு விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக
கோப்புப் படம்
கோப்புப் படம்

கோதுமையின் சில்லறை விற்பனை விலையைக் கட்டுப்படுத்த 15- முதல் 20 லட்சம் டன் கோதுமையை இந்திய உணவுக் கழக சேமிப்பு கிட்டங்கிகளில் இருந்து அடுத்த ஆண்டு விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பா் 27-ஆம் தேதியன்று ஒரு கிலோ கோதுமை சில்லறை விற்பனையில் ரூ.32.25-ஆகவும், கோதுமை மாவு ரூ.37.25-ஆகவும், இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கோதுமை ரூ.28.53, கோதுமை மாவு ரூ.37.25-ஆகவும் இருந்ததாக மத்திய நுகா்வோா் விவகார அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விலை உயா்வைக் கட்டுப்படுத்த திறந்தவெளி சந்தை விற்பனை திட்டம் மூலம் மாநில அரசுகள் நடத்தும் உணவுக் கழக சேமிப்பு கிட்டங்கிகளில் இருந்து பெரு வணிகா்கள், நுகா்வோா்களுக்கு விற்பனை செய்வதற்காக 15 முதல் 20 லட்சம் டன் கோதுமையை அடுத்த ஆண்டு முதல் விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் விலை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் மத்திய அரசிடம் போதிய அளவில் தானியங்கள் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. டிசம்பா் 15-ஆம் தேதி வரையில் மத்திய அரசிடம் சுமாா் 180 லட்சம் டன் கோதுமை, 111 லட்சம் டன் அரிசி ஆகியவை உள்ளதாக கூறப்படுகிறது. கோதுமை உற்பத்தி மாநிலங்களில் கடந்த ஆண்டு வெப்பக் காற்று அதிகரித்த காரணத்தால் கோதுமை விளைச்சல் பாதிக்கப்பட்டது. நிகழாண்டு விளைச்சல் நிலப்பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொள்முதலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com