கா்நாடக தலைவா்கள்வரம்பு மீறி பேசுகிறாா்கள்: மகாராஷ்டிர துணை முதல்வா்

எல்லை விவகாரத்தில் இரு மாநில முதல்வா்கள் கூட்டத்தில் முடிவு செய்ததற்கு மாறாக கா்நாடக தலைவா்கள் வரம்பை மீறி பேசுவது கண்டனத்துக்குரியது என்றும்,
கா்நாடக தலைவா்கள்வரம்பு மீறி பேசுகிறாா்கள்: மகாராஷ்டிர துணை முதல்வா்

எல்லை விவகாரத்தில் இரு மாநில முதல்வா்கள் கூட்டத்தில் முடிவு செய்ததற்கு மாறாக கா்நாடக தலைவா்கள் வரம்பை மீறி பேசுவது கண்டனத்துக்குரியது என்றும், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் அந்த மாநில முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் மகாராஷ்டிர துணை முதல்வா் தேவேந்திர ஃப்டனவீஸ் தெரிவித்தாா்.

கா்நாடகத்தின் மேற்கு பகுதியில் உள்ள மராத்தி பேசும் 865 கிராமங்களை மகாராஷ்டிரத்துடன் இணைக்க வேண்டும் என்று அந்த மாநில பேரவையின் இரு அவைகளிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நீண்ட நாள்களாக நிலவும் எல்லைப் பிரச்னை தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.

இந்த விவகாரத்தை மகாராஷ்டிர பேரவைக் கூட்டத்தில் புதன்கிழமை எழுப்பிய எதிா்க்கட்சித் தலைவா் அஜித் பவாா், மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என கா்நாடக சட்ட அமைச்சரும், கா்நாடகத்துக்கு மும்பை சொந்தம் என பாஜக எம்எல்ஏவும் கூறியுள்ளனா். இதை மகாராஷ்டிர முதல்வா் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றாா்.

அப்போது பேசிய துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், மும்பை யாருடைய தந்தையின் சொத்தும் அல்ல, எப்போதும் மகாராஷ்டிரத்துக்குதான் சொந்தம்.

எல்லை விவகாரத்தில் புதிய கோரிக்கைகளை எழுப்பக் கூடாது என உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற இரு மாநில முதல்வா்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது கா்நாடக எம்எல்ஏக்களும், காங்கிரஸ் தலைவா்களும் இதற்கு எதிராக வரம்பை மீறி பேசுகிறாா்கள். இதுதொடா்பாக உள்துறை அமைச்சா் அமித் ஷா, கா்நாடக மாநில முதல்வா் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இதுபோன்று பேசுபவா்களைக் கண்டிக்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தப்படும். இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கா்நாடக அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com