நீருக்கு அடியில் நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை : 2023-ல் தொடக்கம்

நாட்டிலேயே முதல் முறையாக ஹூக்ளி ஆற்றில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கப்படவிருக்கிறது.
நீருக்கு அடியில் நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை : 2023-ல் தொடக்கம்


கொல்கத்தாவின் கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ஒரு பகுதியாக, நாட்டிலேயே முதல் முறையாக ஹூக்ளி ஆற்றில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதும், மெட்ரோ ரயில்கள், வெறும் 45 வினாடிகளில் 520 மீட்டர் நீருக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்கப்பாதையைக் கடந்து சென்றுவிடும். இந்த கொல்கத்தா சுரங்கப்பாதையானது ஆற்றுப்படுகையின் கீழ் 13 மீட்டரும், தரைப்பகுதியிலிருந்து 33 மீட்டர் ஆழத்திலும் அமைந்துள்ளது.

கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த சால்ட் லேக் செக்டார் வி பகுதியை ஹெளரா மைதானத்தை ஹூக்ளி ஆற்றைக் கடந்து இணைக்கவிருக்கிறது.

இந்தியாவின் முதல் சுரங்கப்பாதை மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணி கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டது, 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2.5 கிலோ மீட்டர் தொலைவுள்ள எஸ்பிளனேடு - சீல்டா இடையேயான வழித்தடம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுவிட்டால் ரயில் இயக்கம் தொடங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

சுரங்கப்பாதைக்குள் ஆற்று நீர் புகாத வகையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி, இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com