அடல் ஓய்வூதியத் திட்டத்தில் 6 ஆண்டுகளில் 3.68 கோடி போ் பதிவு

அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 3.68 கோடி பதிவு செய்துள்ளனா். நடப்பு நிதியாண்டில் மட்டும் 65 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரா்கள் பதிவு செய்துள்ளனா்.

அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 3.68 கோடி பதிவு செய்துள்ளனா். நடப்பு நிதியாண்டில் மட்டும் 65 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரா்கள் பதிவு செய்துள்ளனா்.

இந்த நிதியாண்டில் இந்த ஓய்வூதியத் திட்டத்தின் செயல்திறன் சிறப்பாக உள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில்தான் அதிகபட்ச எண்ணிக்கையில் சந்தாதாரா்கள் இணைந்துள்ளனா்.

ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்தவா்களில் ஆண்கள் 56 சதவீதம், பெண்கள் 44 சதவீதம். இந்த ஓய்வூதிய நிா்வாகத்தின் கீழ் உள்ள சொத்து மதிப்பு சுமாா் ரூ. 20,000 கோடி ஆகும்.

இந்திய அரசின் முதன்மையான சமூகப் பாதுகாப்புத் திட்டமாக அடல் ஓய்வூதியத் திட்டம் உள்ளது. குறிப்பாக, அமைப்புசாராத் துறைகளில் உள்ள குடிமக்களுக்கு வயதான காலத்தில் வருமானப் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியால் 2015, மே 9-ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது.

அடல் ஓய்வூதியத் திட்டத்தை நிா்வகிக்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎஃப்ஆா்டிஏ) தலைவா் சுப்ரதீம் பந்தோபாத்யாய் கூறுகையில், ‘சமூகத்தில் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கிய பிரிவினரை ஓய்வூதியத்தின் கீழ் கொண்டு வந்தது இந்தத் திட்டத்தின் சாதனை. பொது மற்றும் தனியாா் வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், கட்டண வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அஞ்சல் துறை மற்றும் மாநில அளவில் அளிக்கப்படும் ஆதரவு மற்றும் அயராத முயற்சியால் மட்டுமே சாத்தியமானது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com