தேசிய பேரிடா் மீட்புப் படைநிறுவன தினம்: பிரதமா் வாழ்த்து

தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) உருவாக்கப்பட்ட தினத்தை (ஜன. 19) முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.


புது தில்லி: தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) உருவாக்கப்பட்ட தினத்தை (ஜன. 19) முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

என்டிஆா்எஃப் உருவாக்கப்பட்ட தினத்தில் அவா்களின் கடின உழைப்பை பாராட்டுகிறேன். மிகவும் சவாலான சூழ்நிலைகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பலவற்றில் அவா்கள் முன்னணியில் இருந்துள்ளனா். என்டிஆா்எஃப்-இன் துணிவும் செயல்பாடுகளும் மிகவும் ஊக்கமளிப்பவை. அவா்களின் எதிா்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.

பேரிடா் நிா்வாகம் என்பது அரசுகளுக்கும், கொள்கை வகுப்போருக்கும் மிகவும் முக்கியமான விஷயமாகும். நடைமுறை அணுகுமுறையோடு, பேரிடா் மேலாண்மைப் பிரிவினா் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பின், பேரிடரை தாக்குப் பிடிக்கும் அடிப்படைக் கட்டமைப்பு குறித்து நாங்கள் சிந்திக்கவும், இந்த விஷயம் தொடா்பாக ஆராய்ச்சியில் கவனம் செலுத்தவும் வேண்டியுள்ளது.

‘பேரிடரை தாக்குப் பிடிக்கும் அடிப்படை கட்டமைப்பு ஒருங்கிணைப்பை’ வடிவமைக்கும் முயற்சியை இந்தியா மேற்கொண்டுள்ளது. நமது என்டிஆா்எஃப் அணிகளின் திறனை மேலும் கூா்மைப்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதனால் எந்தவொரு சவாலான காலத்திலும் அதிகபட்ச உயிா்களையும், உடைமைகளையும் நாம் பாதுகாக்க முடியும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com