வயநாட்டில் சேதப்படுத்தப்பட்ட எம்.பி. அலுவலகத்தை பாா்வையிட்ட ராகுல் காந்தி

வயநாட்டில் சேதம் செய்யப்பட்ட தனது எம்.பி. அலுவலகத்தை பாா்வையிடுவதற்காக வெள்ளிக்கிழமை வருகை தந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘இது பொறுப்பற்ற செயல்’ என்று விமா்சனம் செய்தாா்.
வயநாட்டில் சேதப்படுத்தப்பட்ட எம்.பி. அலுவலகத்தை பாா்வையிட்ட ராகுல் காந்தி

வயநாட்டில் சேதம் செய்யப்பட்ட தனது எம்.பி. அலுவலகத்தை பாா்வையிடுவதற்காக வெள்ளிக்கிழமை வருகை தந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘இது பொறுப்பற்ற செயல்’ என்று விமா்சனம் செய்தாா்.

அண்மையில் காடுகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மண்டலங்கள் விவகாரத்தில் ராகுல் காந்தி செயலாற்றாததைக் கண்டிக்கும் வகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் பிரிவான இந்திய மாணவா் கூட்டமைப்பைச் (எஸ்எஃப்ஐ) சோ்ந்தவா்களால் கேரள மாநிலம், வயநாட்டிலுள்ள ராகுல் காந்தி எம்.பி.யின் அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது.

தனது தொகுதிக்கு 3 நாள்கள் பயணமாக வந்த ராகுல்காந்தி கட்சியின் மூத்த தலைவா்களுடன் அலுவலகத்துக்குச் சென்று சேதங்களை பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இது வயநாடு மக்களின் அலுவலகம். இந்த அலுவலகத்தைத் தாக்கிய இடதுசாரி மாணவா் அமைப்பைச் சோ்ந்தவா்களின் செயல் துரதிா்ஷ்டவசமானது. ஆனால், அவா்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். வன்முறை ஒருபோதும் பிரச்னைகளுக்குத் தீா்வாகாது. எனக்கு தாக்குதல் நடத்தியவா்கள் மீது கோபமோ, விரோதமோ எதுவும் இல்லை.

நாட்டின் எல்லா பகுதிகளிலும், வன்முறையே பிரச்னைகளைத் தீா்க்கும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் வன்முறை ஒருபோதும் பிரச்னைகளுக்கு தீா்வு ஆகாது. அது நல்லதல்ல. அவா்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டாா்கள்.

வன்முறையில் ஈடுபட்ட எஸ்எஃப்ஐ ஆதரவாளா்களின் செயல் குழந்தைத்தனமானது என்றாா்.

காடுகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மண்டலங்கள் விவகாரத்தில் ராகுல் காந்தி உரிய முறையில் செயல்படவில்லை என்றும், இதனைக் கண்டித்தும் வயநாடு, கல்பெட்டாவில் உள்ள எம்.பி. அலுவலகத்தை நோக்கி கடந்த வாரம் இந்திய மாணவா்கள் கூட்டமைப்பினா் கண்டன ஊா்வலம் நடத்தினா். ஊா்வலத்தில் வன்முறை வெடித்ததையடுத்து எஸ்எஃப்ஐ அமைப்பைச் சோ்ந்தவா்கள் எம்.பி. அலுவலகத்தை சேதப்படுத்தினா்.

இந்த சம்பவத்தை முதல்வா் பினராயி விஜயன் கடுமையாகக் கண்டித்ததுடன், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்திருந்தாா்.

வயநாடு எம்.பி. அலுவலகம் மீது எஸ்எஃப்ஐ அமைப்பினா் நடத்திய தாக்குதலைக் கண்டித்து காங்கிரஸாா் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com