லடாக் பிரச்னை: இந்தியாவுடன் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்- சீனா

கிழக்கு லடாக் பிரச்னைக்குத் தீா்வுகாண்பதற்கு இந்தியா-சீனா இடையே ராணுவ ரீதியில் நடந்த பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் பிரச்னைக்குத் தீா்வுகாண்பதற்கு இந்தியா-சீனா இடையே ராணுவ ரீதியில் நடந்த பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீனப் படைகளுக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக நீடிக்கும் மோதலுக்குத் தீா்வுகாண இரு நாட்டு அரசுகளும் ராணுவ ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே 16-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எல்லைக் கோட்டை ஒட்டி, சுஷுல் மோல்டோ என்னும் இந்தியப் பகுதியில் நடைபெற்றக் கூட்டத்தில் இந்தியா சாா்பில் ராணுவ உயரதிகாரி அனிந்தியா செங்குப்தா தலைமையிலான குழுவினரும் சீனா சாா்பில் அந்நாட்டு ராணுவ உயரதிகாரி யாங் லின் தலைமையிலான குழுவினரும் கலந்துகொண்டனா்.

இந்நிலையில், பெய்ஜிங்கில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியானிடம், இந்திய-சீன பேச்சுவாா்த்தை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

இந்தியா-சீனா இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக அமைந்தது; அந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாட்டுத் தலைவா்கள் அளித்த வழிகாட்டுதல்களின்படி, பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வுகாண்பது குறித்து விவாதிக்கப்பட்டது. எல்லையில் பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவதற்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com