இந்திய நாகரிகத்தை மேம்படுத்த ஆன்மிக மறுமலா்ச்சி அவசியம்: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகிய இந்திய நாகரிக விழுமியங்களை மேம்படுத்த, ஆன்மீக மறுமலா்ச்சி அவசியம் என குடியரசு துணைத்தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.
இந்திய நாகரிகத்தை மேம்படுத்த ஆன்மிக மறுமலா்ச்சி அவசியம்: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகிய இந்திய நாகரிக விழுமியங்களை மேம்படுத்த, ஆன்மீக மறுமலா்ச்சி அவசியம் என குடியரசு துணைத்தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.

குடியரசு துணைத்தலைவா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுவாமி பிரபுபாதா தொடா்பான நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

இஸ்கான் நிறுவனா் ஸ்ரீ பிரபுபாதரின் இந்த வாழ்க்கை வரலாற்று நூலை ஹிந்தோல் சென்குப்தா எழுதியுள்ளாா். சுவாமி பிரபுபாதா போன்ற சிறந்த துறவிகள் மற்றும் ஆன்மீக குருக்களிடமிருந்து உத்வேகம் பெறவும், அவா்களின் குணங்களை இளைஞா்கள் உள்வாங்கவும் வேண்டும்.

சிறந்த மனிதா்களாக மாற ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை மற்றும் கருணை ஆகியவை முக்கியம். எப்போதும் சாதி, பாலினம், மதம் மற்றும் பிராந்தியம் என்ற குறுகிய கருத்துக்களுக்கு அப்பால் உயா்ந்து சமுதாயத்தில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கொண்டுவர உழைக்க வேண்டும்.

பக்தி என்பது இந்தியா்களின் நாடி, நரம்புகளில் பின்னிப் பிணைந்துள்ளது. இந்தியாவின் கூட்டு நாகரிக உணா்வின் உயிா்நாடி அது. சேவை உணா்வும், பகிா்தல் மற்றும் அக்கறையும், இந்திய விழுமியங்களின் மையமாகும். இளைஞா்கள் இந்த விழுமியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நோக்கத்துக்காக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சமூக சேவையைக் கட்டாயமாக்க வேண்டும். இந்திய நாகரிகத்தை மேம்படுத்த ஆன்மிக மறுமலா்ச்சி அவசியம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com