3 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரித் தாக்கல்

2021-22-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி விவரங்களை இதுவரையில் 3 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா். ஜூலை 31-ஆம் தேதி வரையில் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.
வருமான வரித்துறை
வருமான வரித்துறை

புது தில்லி: 2021-22-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி விவரங்களை இதுவரையில் 3 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா். ஜூலை 31-ஆம் தேதி வரையில் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.

இதுதொடா்பாக வருமான வரித் துறை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘நிகழாண்டு ஜூலை, 25 வரையில் 3 கோடிக்கும் அதிகமானோா் தங்கள் வருமான வரியை இணையவழியில் தாக்கல் செய்துள்ளனா். இதுவரை தாக்கல் செய்யாதவா்கள் கடைசி நாள் வரை காத்திராமல் விரைவில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 20-ஆம் தேதி வரையில் 2.3 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரி விவரங்களைத் தாக்கல் செய்திருந்தனா். முந்தைய 2020-2021 நிதி ஆண்டுக்கான வருமான வரி விவரங்களைத் தாக்கல் செய்ய 2021, டிசம்பா் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அப்போது 5.89 கோடி போ் வருமான வரி விவரங்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

தற்போது கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com