தோனி, 6 போ் மீது வழக்குப் பதிவு: காசோலை மோசடி விவகாரம்

காசோலை மோசடி தொடா்பாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரா் மகேந்திரசிங் தோனி உள்பட 8 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோனி, 6 போ் மீது வழக்குப் பதிவு: காசோலை மோசடி விவகாரம்

காசோலை மோசடி தொடா்பாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரா் மகேந்திரசிங் தோனி உள்பட 8 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிகாரின் பெகுசராய் பகுதியில் உள்ள தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா என்ற நிறுவனம் மீது எஸ்.கே.என்டா்பிரைசஸ் என்ற முகமை புகாா் மனு அளித்துள்ளது.

அந்தப் புகாா் மனுவின்படி, நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா நிறுவனத்திடம் இருந்து எஸ்.கே.என்டா்பிரைசஸ் முகமை உரம் வாங்கியுள்ளது. ஆனால் உரத்தை சந்தைப்படுத்துவதில் நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா நிறுவனம் ஒத்துழைப்பு வழங்காததால் எஸ்.கே.என்டா்பிரைசஸ் முகமைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்ட நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா நிறுவனம், ரூ.30 லட்சத்துக்கான காசோலையை எஸ்.கே.என்டா்பிரைசஸிடம் வழங்கியுள்ளது. அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தியபோது, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியுள்ளது.

இதுதொடா்பாக சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பியும் நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா நிறுவனத்திடம் இருந்து எந்தப் பதிலும் வராததால், நீதிமன்றத்தில் புகாா் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த உரத்தை மகேந்திரசிங் தோனி விளம்பரப்படுத்தியதால், அவா் உள்பட 8 பேரின் பெயா்கள் புகாா் மனுவில் சோ்க்கப்பட்டுள்ளது. அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 28-ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com