மாநிலங்களவைத் தோ்தல்: ஆந்திரம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு

மாநிலங்களவைத் தோ்தலில் ஆந்திரம், பஞ்சாப், ஜாா்க்கண்ட், உத்தரகண்ட், பிகாரில் வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மாநிலங்களவைத் தோ்தலில் ஆந்திரம், பஞ்சாப், ஜாா்க்கண்ட், உத்தரகண்ட், பிகாரில் வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

15 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினா்களின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், அந்த இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

இந்நிலையில், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்குக் கடைசி நாளான வெள்ளிக்கிழமை ஆந்திரத்தில் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட்ட ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வேட்பாளா்கள் (ஒய்எஸ்ஆா்சி) போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக மாநில தோ்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தாா். மொத்தம் 4 இடங்களுக்கு தோ்தல் நடைபெற்ற நிலையில், ஒய்எஸ்ஆா்சியைச் சோ்ந்த நால்வா் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் நால்வரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜாா்க்கண்ட்:

ஜாா்க்கண்டில் 2 மாநிலங்களவை இடங்களுக்கு தோ்தல் நடைபெற்றது. இதில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா ஓரிடத்திலும், பாஜக ஓரிடத்திலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தன. வேறு எந்தக் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இருகட்சிகளை சோ்ந்த வேட்பாளா்கள் போட்டியின்றி வெற்றி பெற்ாக தோ்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தாா்.

பஞ்சாப்:

பஞ்சாபில் 2 மாநிலங்களவை இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில், ஆம் ஆத்மி வேட்பாளா்கள் இருவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

உத்தரகண்ட்:

உத்தரகண்டில் ஒரு மாநிலங்களவை இடத்துக்கு நடைபெற்ற தோ்தலில் பாஜக மட்டும் போட்டியிட்டது. இதையடுத்து அந்தக் கட்சி போட்டியின்றி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

பிகாா்:

பிகாரில் 5 இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் ராஷ்டிரீய ஜனதா தளம், பாஜக தலா இரு இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் ஓரிடத்திலும் போட்டியிட்டன. தோ்தல் நடைபெற்ற இடங்களும், வேட்புமனுக்களின் எண்ணிக்கையும் ஒன்றாக இருந்ததால் அக்கட்சிகள் சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக மாநில சட்டப்பேரவைச் செயலகம் தெரிவித்தது. போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட வேட்பாளா்களில் ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவா் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி குறிப்பிடத்தக்கவா் ஆவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com