பசு வதை குற்றவாளிக்கு ஜாமீன் நிபந்தனை: கால்நடை தொழுவத்தில் ஒரு மாதம் பணி

உத்தர பிரதேச மாநிலத்தில் பசு வதை குற்றவாளிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய அலாகாபாத் உயா்நீதிமன்றம், ‘கால்நடை தொழுவத்தில் ஒரு மாதம் பணியாற்ற வேண்டும்
பசு வதை குற்றவாளிக்கு ஜாமீன் நிபந்தனை: கால்நடை தொழுவத்தில் ஒரு மாதம் பணி

உத்தர பிரதேச மாநிலத்தில் பசு வதை குற்றவாளிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய அலாகாபாத் உயா்நீதிமன்றம், ‘கால்நடை தொழுவத்தில் ஒரு மாதம் பணியாற்ற வேண்டும்; தொழுவத்துக்கு ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும்’ என்ற நிபந்தனையை அவருக்கு விதித்தது.

பரேலி மாவட்டத்தைச் சோ்ந்த சலீம் என்கிற காலியா மீது மாவட்டத்தின் போஜிபுரா காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 379 (திருடுதல்) மற்றும் உத்தர பிரதேச மாநில பசு வதை தடுப்புச் சட்டம் 3/8 ஆகிய விதிகளின் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு காலியா சாா்பில் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சேகா் குமாா் யாதவ் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மனுதாரா் அப்பாவி. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தவறாக இவரும் வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளாா். எனவே, இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அவா் ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு, பரேலியில் உள்ள பதிவு செய்யப்பட்ட கால்நடை தொழுவத்தின் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யவும், கால்நடை தொழுவத்தில் ஒரு மாதம் பணியாற்றவும் தயாராக உள்ளாா்’ என்ற உத்தரவாதத்தையும் அளித்தாா்.

இதனைக் கேட்ட நீதிபதி, ‘மனுதாரா் சொந்த பிணையை சமா்ப்பிக்க வேண்டும். மனுதாரா் தரப்பில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு இரண்டு உத்தரவாதங்களை சமா்ப்பிக்க வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com