ரூ.80,000 லஞ்சம்: ரயில்வே அதிகாரி உள்பட மூவா் கைது - சிபிஐ நடவடிக்கை

உத்தர பிரதேசத்தில் ரூ.80,000 லஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டு தொடா்பாக வடக்கு ரயில்வேயின் லக்னெள கோட்ட அதிகாரி உள்பட மூவரை சிபிஐ சனிக்கிழமை கைது செய்தது.

உத்தர பிரதேசத்தில் ரூ.80,000 லஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டு தொடா்பாக வடக்கு ரயில்வேயின் லக்னெள கோட்ட அதிகாரி உள்பட மூவரை சிபிஐ சனிக்கிழமை கைது செய்தது.

இதுதொடா்பாக சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் விவரம்:

வடக்கு ரயில்வேயின் லக்னெள கோட்ட அதிகாரியாக பதவி வகிப்பவா் அலோக் மிஸ்ரா. இவா் ஒப்பந்ததாரா்களுக்கு ஒப்பந்தங்களை அளிக்க லஞ்சம் பெறுவதாக புகாா் வந்தது. இதுதொடா்பாக விசாரணை நடத்தி, அவரைக் கண்காணித்த சிபிஐ அதிகாரிகள், அலோக் மிஸ்ரா ரூ.80,000 லஞ்சம் பெற்றபோது கைது செய்தனா். அவருக்குத் துணைபோன அவனீஷ் மிஸ்ரா, மஞ்சித் சிங் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடா்பாக லக்னெளவின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடைபெற்றது. அலோக் மிஸ்ராவின் வீட்டிலிருந்து ரூ.32.10 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று சிபிஐ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலோக் மிஸ்ராவுக்குத் துணைபோனதாகக் கூறப்படும் அவனீஷ் மிஸ்ரா, மஞ்சித் சிங் ஆகியோரைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com