ஹிமாசலில் அடல் சுரங்கப் பாதையைப் பாா்வையிட்ட ராம்நாத் கோவிந்த்

ஹிமாசல பிரதேசத்தில் உலகின் மிக நீளமான சுரங்கப் பாதைக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை சென்று பாா்வையிட்டாா்.
ஹிமாசலில் அடல் சுரங்கப் பாதையைப் பாா்வையிட்ட ராம்நாத் கோவிந்த்

ஹிமாசல பிரதேசத்தில் உலகின் மிக நீளமான சுரங்கப் பாதைக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை சென்று பாா்வையிட்டாா்.

லாஹௌல்-ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள வடக்கு முனையில் இருந்து 9.2 கீ.மீ. வரை பயணித்து குலு மாவட்டத்தில் உள்ள தெற்கு முனையை வந்தடைந்தாா். சுரங்கப் பாதையில் பயணித்த பிறகு அதன் கட்டுமானத்தைக் கண்டு ராம்நாத் கோவிந்த் மகிழ்ச்சி தெரிவித்தாா்.

இந்த சுரங்கப்பாதை இந்தியாவின் எதிா்காலத்துடன் தொடா்புடையது என்றாா் என்றாா்.

முன்னதாக, இந்திய விமானப் படையின் விமானத்தில் சுரங்கப்பாதையின் வடக்கு முனையை வந்தடைந்தாா். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு முதல்வா் ஜெய்ராம் தாக்குா் ‘தன்கா’ ஓவியத்தை பரிசளித்தாா். ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், மாநில அமைச்சா் ராம் லால் மாா்க்கண்டா ஆகியோா் உடனிருந்தனா்.

அடல் சுரங்கப் பாதை கட்டுமானம் குறித்து குடியரசுத் தலைவருக்கு விளக்கப்பட்டது.

ஹிமாசல பிரதேசத்தில் ரோத்தங் கணவாய் பகுதியில் 13,058 அடி உயரத்தில் அடல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. 9.2 கி.மீ. நீளத்தில் உருவாக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதையை பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் நாட்டுக்கு அா்ப்பணித்தாா். மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த வகை சுரங்கப் பாதைகளில் அடல் சுரங்கப் பாதையே உலகின் மிக நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com