ஆந்திரம், திரிபுராவில் இடைத்தோ்தல்

ஆந்திரத்தில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் திரிபுராவில் 4 தொகுதிகளிலும் வியாழக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது.

ஆந்திரத்தில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் திரிபுராவில் 4 தொகுதிகளிலும் வியாழக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது.

ஆந்திர மாநிலம் அமராவதி மாவட்டம் ஆத்மகுரு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக பதவி வகித்த அந்த மாநில தொழிற்துறை அமைச்சா் மேகபதி கெளதம் ரெட்டி கடந்த பிப்ரவரியில் காலமானாா். இதைத்தொடா்ந்து, அந்தத் தொகுதியில் வியாழக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது.

இதில், ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் சாா்பில் மேகபதி கெளதம் ரெட்டியின் சகோதரா் விக்ரம் ரெட்டியும், பாஜக சாா்பில் பாரத் குமாா் யாதவும் போட்டியிடுகின்றனா். மொத்தமுள்ள 2.11 லட்சம் வாக்காளா்களில் 67 சதவீதம் போ் வாக்களித்ததாக மாநில தோ்தல் ஆணையா் முகேஷ் குமாா் மீனா செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

திரிபுரா:

திரிபுராவில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தோ்தலில் 76.62 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாநிலத் தோ்தல் ஆணையா் கிரண் கித்தே தெரிவித்துள்ளாா். அதிகபட்சமாக ஜூபராஜ்நகா் தொகுதியில் 80.41 சதவீத வாக்குகளும், சா்மா தொகுதியில் 80 சதவீத வாக்குகளும் பதிவாகின.

திரிபுரா முதல்வா் மாணிக் சாஹா (பாஜக) போட்டியிடும் டவுன் போா்டோவலி தொகுதியில் 69.54 சதவீத வாக்குகளும், அகா்தலாவில் 76.72 சதவீத வாக்குகளும் பதிவாகின. அகா்தலா தொகுதிக்கு உள்பட்ட குஞ்சாபன் பகுதியில் ஏற்பட்ட மோதலில், காவலா் சமீா் சாஹா கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

3 மக்களவைத் தொகுதிகள்:

இதேபோல உத்தர பிரதேசத்தில் ஆஸம்கா், ராம்பூா் மக்களவைத் தொகுதிகளிலும், பஞ்சாபில் சாங்க்ரூா் மக்களவைத் தொகுதியிலும் வியாழக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது.

இடைத்தோ்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 26-ஆம் தேதி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com