சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவர் மாணவர்கள் போராட்டம்

உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த இந்திய மாணவர்கள் அந்நாட்டில் போர் மூண்டதால், தாயகம் திரும்பிய நிலையில், நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் தங்களுக்கு சேர்க்கை வழங்கக் கோரி போராட்ட

News image
Updated On :24 ஜூன் 2022, 6:04 pm IST


புது தில்லி: உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த இந்திய மாணவர்கள் அந்நாட்டில் போர் மூண்டதால், தாயகம் திரும்பிய நிலையில், நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் தங்களுக்கு சேர்க்கை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உக்ரைனில் மருத்துவம் பயின்றி, நாடு திரும்பிய மாணவர்களின் கல்வியாண்டு பாதிக்கப்படாத வகையில், நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஒரே ஒரு முறை சேர்க்கை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பார்க்க.. வேட்புமனுத் தாக்கல் செய்தார் திரௌபதி முர்மு - புகைப்படங்கள்

தில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா, இமாசலம், பஞ்சாப், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவர்களும் பெற்றோர்களும் புது தில்லி வந்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை வழங்கவும், மருத்துவம் பயில்வதால் ஆன்லைன் கல்வி என்பது சரியாக இருக்காது என்றும் பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.