6 மாதங்களில் 5 லட்சம் ஆப்கன் அகதிகள் நாடு திரும்பினர்: தலிபான் அரசு

கடந்த 6 மாதங்களில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஆப்கன் அகதிகள் நாடு திரும்பியுள்ளதாக தலிபான் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
6 மாதங்களில் 5 லட்சம் ஆப்கன் அகதிகள் நாடு திரும்பினர்: தலிபான் அரசு

கடந்த 6 மாதங்களில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஆப்கன் அகதிகள் நாடு திரும்பியுள்ளதாக தலிபான் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான டோர்காம் எல்லைக்கு வந்தபோது, அகதிகள் அமைச்சகத்தின் துணை அமைச்சர் முகமது அர்சலா கரோடாய் விழானன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 

வெளிநாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆப்கானியர்களை விடுவிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தை பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவுடன் இணைக்கும் பாதையில் உள்ள பிரச்னைகள் குறித்து குடிமக்கள் பலமுறை புகார் அளித்தனர். எனவே, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், நங்கர்ஹாரில் உள்ள தோர்காம் துறைமுகம் மற்றும் காந்தஹாரில் உள்ள ஸ்பின் போல்டாக் துறைமுகத்தில் உள்ள ஒழுக்கம் மற்றும் சுகாதாரப் பிரச்னைகள் மற்றும் பிற பிரச்னைகளைத் தீர்க்க, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் துறைகளை முறையாக செயல்படுத்தவும், மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு போதுமான மற்றும் தொழில்முறை பணியாளர்களை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இஸ்லாமிய எமிரேட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஆறு அதிகாரப்பூர்வ எல்லைகள் மற்றும் வர்த்தக முனையங்கள் உள்ளன, அதாவது டோர்காம், சாமன், அங்கூர் அடா, பாடினி, குலாம் கான் மற்றும் கர்லாச்சி ஆகியனவாகும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com