டிரோன் மூலம் போதைப்பொருள்: எல்லைப் படையினர் என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் அருகே பரோபால் கிராமத்துக்குள், டிரோன்கள் மூலம் போதைப் பொருளை போடும் பாகிஸ்தானுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து பறந்து வந்த டிரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படையினர், அதிலிருந்து 10.6 கிலோ எடையுள்ள ஹெராயினை பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் கூறியிருப்பதாவது, பாகிஸ்தான், டிரோன் மூலம் நடத்தும் அடுத்த போதைப் பொருள் கடத்தல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. முதலில் டிரோன் சத்தம் கேட்டது. உடனடியாக அதனை சுட்டு வீழ்த்தினோம். அது விழுந்த இடத்தில் தேடுதல் பணி நடந்தது. அங்கே 9 பாக்கெட்டுகளில் ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருள்களுடன் நேற்று இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டுக்குள் தீவிரவாதத்தை நுழைத்து வந்த பாகிஸ்தான், தற்போது போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு வருகிறது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com