மகாராஷ்டிரம், ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் வரி குறைப்பு

மகாராஷ்டிரத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) மாநில அரசு குறைத்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) மாநில அரசு குறைத்துள்ளது.

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 மத்திய அரசு சனிக்கிழமை குறைத்தது. இந்நிலையில் மகாராஷ்டிர அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் மீதான வாட் வரி லிட்டருக்கு ரூ.2.08, டீசல் மீதான வாட் வரி லிட்டருக்கு ரூ.1.44 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுக்கு பெட்ரோல் மூலம் கிடைக்கும் மாதாந்திர வருவாயில் ரூ.80 கோடி, டீசல் மூலம் கிடைக்கும் மாதாந்திர வருவாயில் ரூ.125 கோடி குறையும். அத்துடன் மாநில அரசின் கருவூலத்துக்கு ஆண்டுக்கு ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானிலும்...: ராஜஸ்தானில் பெட்ரோல் மீதான வாட் வரி லிட்டருக்கு ரூ.2.48, டீசல் மீதான வாட் வரி லிட்டருக்கு ரூ.1.16 குறைக்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட் தெரிவித்துள்ளாா்.

கேரளத்தில் பெட்ரோல் மீதான வாட் வரி லிட்டருக்கு ரூ.2.41, டீசல் மீதான வாட் வரி லிட்டருக்கு ரூ.1.36 குறைக்கப்படும் என்று அந்த மாநில அரசு சனிக்கிழமை அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com