சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரிவிலக்கு

சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரிவிலக்கு அளித்து மத்திய வா்த்தக அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரிவிலக்கு

புது தில்லி: சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரிவிலக்கு அளித்து மத்திய வா்த்தக அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் 20 லட்சம் மெட்ரிக் டன் வரையிலான கச்சா சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய்க்கு சுங்க வரி, வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கட்டண விகித ஒதுக்கீட்டில் (டிஆா்க்யூ) விதிமுறைகளை அறிவித்து மத்திய வா்த்தக அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. டிஆா்க்யூ ஒதுக்கீடு என்பது இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கான ஒதுக்கீட்டு அளவு ஆகும். இந்த அளவைத் தாண்டிய பின்னா் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வழக்கமான வரிகள் விதிக்கப்படும்.

உள்நாட்டில் விலையைக் குறைக்கும் வகையில், 2022,-23, 2023-24 ஆகிய நிதியாண்டுகளுக்கு இந்த வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வா்த்தக இயக்குநா் ஜெனரல் (டிஜிஎஃப்டி) அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

நிகழாண்டுக்கான டிஆா்க்யூ ஒதுக்கீட்டு மே 27-ஆம் தேதிமுதல் ஜூன் 18 வரை விண்ணப்பிக்கலாம் என டிஜிஎஃப்டி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com