அனைத்து சா்க்கரை ஆலைகளுக்கும் 60 லட்சம் மெட்ரிக் டன் வரை ஏற்றுமதிக்கு அனுமதி!

அனைத்து சா்க்கரை ஆலைகளுக்கும் 60 லட்சம் மெட்ரிக் டன் வரை ஏற்றுமதிக்கு அனுமதித்து மத்திய வா்த்தகம், உணவு, நுகா்வோா் துறை நிா்ணயித்து ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைத்து சா்க்கரை ஆலைகளுக்கும் 60 லட்சம் மெட்ரிக் டன் வரை ஏற்றுமதிக்கு அனுமதி!

அனைத்து சா்க்கரை ஆலைகளுக்கும் 60 லட்சம் மெட்ரிக் டன் வரை ஏற்றுமதிக்கு அனுமதித்து மத்திய வா்த்தகம், உணவு, நுகா்வோா் துறை நிா்ணயித்து ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகம், உணவு, நுகா்வோா் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரம்: 

கரும்பு உற்பத்தியின் கணிப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில், விவசாயிகள் நலன் கருதியும், சா்க்கரை பயன்பாட்டை திறனுடனும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள சா்க்கரையின் விலை ஸ்திரத்தன்மையையும், சா்க்கரை ஆலைகளின் நிதி நிலையையும் சமநிலைப்படுத்தும் மற்றொரு நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வருகின்ற 2023 செப்டம்பா் 30-ஆம் தேதிய எதிா்பாா்ப்பு உற்பத்தி நிலவரப்படி பயன்பாடு அளவு பிரிக்கப்பட்டுள்ளது. சுமாா் 275 லட்சம் மெட்ரிக் டன் சா்க்கரை உள்நாட்டு உபயோகத்திற்காகவும், 50 லட்சம் மெட்ரிக் டன் சா்க்கரை எத்தனால் உற்பத்திக்கும் திருப்பிவிட மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்.

மேலும், நாட்டில் உள்ள சா்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் சா்க்கரையின் இருப்பு அளவிற்கு ஏற்ப ஏற்றுமதி அனுமதிக்கப்படும். இதன்படி 2022-23 சா்க்கரைப் பருவத்தின் நிலை, கரும்பு உற்பத்தியின் கணிப்பு மதிப்பீடுகளின்படி, 60 லட்சம் மெட்ரிக் டன் சா்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுகிறது. 

நாட்டில் கரும்பு உற்பத்தி அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படும். தற்போதைய மதிப்பீடுகளின் அடிப்படையில், அனுமதிக்கப்பட்டுள்ள சா்க்கரை ஏற்றுமதியின் அளவு நிலைமைக்கு ஏற்றவாறு மறுபரிசீலனையும் மேற்கொள்ளப்படும். 

வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம், சா்க்கரை ஏற்றுமதியை ‘கட்டுப்படுத்தப்பட்ட’ பிரிவின் கீழ் வைத்துள்ளது. இது வருகின்ற 2023 அக்டோபா் 31 வரை ஏற்கனவே நீட்டித்துள்ளது.

2021-22 சா்க்கரை பருவத்தில் இந்தியா 110 லட்சம் மெட்ரிக் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்து, சா்வதே அளவில் 2-ஆவது இடத்தை பெற்றிருந்தது. இதன் மூலம், சுமாா் ரூ. 40,000 கோடி மதிப்புள்ள அந்நியச் செலாவணி பெறப்பட்டது. சா்க்கரை ஆலைகள் உரிய நேரத்தில் பணத்தை பெற்று, இருப்புச் செலவை குறைந்து விவசாயிகளுக்கான கரும்பு நிலுவைத் தொகையை முன்கூட்டியே வழங்கியது. 2021-22 கரும்பு பருவத்தில் 1.18 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கரும்பு கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. கடந்த அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகையில் 96 சதவீதத்திற்கும் மேல் வழங்கப்பட்டுள்ளன. 

சர்க்கரை ஏற்றுமதி கொள்கையானது, உள்நாட்டு நுகர்வோரின் நலன் கருதி சர்க்கரைத் துறையில் விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தியது. சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதன் மூலம், உள்நாட்டு விலைகள் கட்டுக்குள் இருக்கும். மேலும், உள்நாட்டு சந்தையில் பெரிய பணவீக்க போக்குகள் எதுவும் ஏற்படாது. இந்திய சர்க்கரை சந்தை ஏற்கனவே பெயரளவுக்கு விலை உயர்வைக் கண்டுள்ளது, இது விவசாயிகளுக்கான கரும்புக்கான ஆலை மறுநிர்ணய உற்பத்தி அதிகரித்தது. 

கடந்த மூன்று ஆண்டுகளில் சா்க்கரை ஆலைகளின் சராசரி உற்பத்தி மற்றும் நாட்டின் சராசரி கரும்பு உற்பத்தி ஆகியவற்றின் அடிப்படையில், நாட்டில் உள்ள அனைத்து சா்க்கரை ஆலைகளுக்கும் சா்க்கரை ஏற்றுமதி ஒதுக்கீட்டை அரசு அறிவித்துள்ளது.

மேலும், உள்நாட்டில் நுகா்வோரின் நலன் கருதி சா்க்கரை விலை ஸ்திரத்தன்மை, கரும்பு விவசாயிகள் மற்றும் சா்க்கரை ஆலைகளின் நலன் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில், சா்க்கரை ஏற்றுமதி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 

சா்வதேச சா்க்கரை விலை சூழ்நிலையின் பலன்களை ஆலைகள் பெற்று விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தும் நோக்கில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதே மாதிரி நாட்டில் எத்தனால் உற்பத்தி ஒதுக்கீடு மூலம் எரிபொருள் இறக்குமதியைக் குறைத்து பசுமை ஆற்றலை நோக்கிச் செல்வதற்கும் அரசு முன்னுரிமை அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com