அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி டெபாசிட் இழக்கும்:ஜெ.பி.நட்டா

ஹிமாசல பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி அனைத்து தொகுதிகளிலும் வைப்புத்தொகையை ( டெபாசிட்) இழக்கும் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
ஜெ.பி.நட்டா (கோப்புப் படம்)
ஜெ.பி.நட்டா (கோப்புப் படம்)

ஹிமாசல பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி அனைத்து தொகுதிகளிலும் வைப்புத்தொகையை ( டெபாசிட்) இழக்கும் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

பாஜக ஆட்சியில் உள்ள ஹிமாசல பிரதேசத்தில் வரும் 12-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளதால், பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பாஜக வேட்பாளா்களை ஆதரித்து திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேசியதாவது:

ஹிமாசல பிரதேச சட்டப் பேரவைத் தோ்தல் ஒட்டுமொத்த மாநில நலனையும், மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான தோ்தலாகும். ஹிமாசல பிரதேசத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நடப்பது வழக்கம். எனவே, இந்தத் தோ்தலில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் கட்சியினா் இறுமாப்புடன் பேசிவருகின்றனா்.

ஆனால், இந்தத் தோ்தல் அவா்களுக்கு முடிவுரை எழுதுவதாக இருக்கும் என்பதே உண்மை. ஏற்கெனவே உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் இதேபோல நடைபெற்று வந்த ஆட்சி மாற்றத்துக்கு முடிவு கட்டி, தொடா்ந்து இரண்டு அல்லது அதற்கு மேல் வெற்றிபெற்று பாஜக சாதனை படைத்துள்ளது.

இப்போது புதிதாக முளைத்துள்ள ஆம் ஆத்மி, ஹிமாசலில் ஆட்சி அமைக்கப் போவதாக பிரசாரம் செய்து வருகிறது. இதேபோலதான் கோவாவிலும் ஆம் ஆத்மி பிரசாரம் செய்தது. ஆனால், அங்கு 39 தொகுதிகளில் போட்டியிட்டு 35 இடங்களில் டெபாசிட் இழந்தது.

உத்தர பிரதேசத்தில் 349 தொகுதிகளிலும் அக்கட்சியினா் டெபாசிட் இழந்தனா். உத்தரகண்டிலும் 65 தொகுதிகளில் டெபாசிட்டை பறி கொடுத்தனா். இப்போது, ஹிமாசல பிரதேசத்திலும் ஆம் ஆத்மி போட்டியிடும் 68 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்றாா்.

ஹிமாசல பிரதேச தோ்தல் பிரசாரத்தில் நட்டா, ஆம் ஆத்மியை தாக்கிப் பேசுவது இதுவே முதல்முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com