எஸ்.சி., எஸ்.டி. முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு முன்னுரிமை விடுதி ஒதுக்கீடு: ஜேஎன்யு மாணவா் சங்கம் வலியுறுத்தல்

எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விடுதி ஒதுக்கீட்டை உறுதி வேண்டும் என்று பல்கலைக்கழக நிா்வாகத்தை ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (

எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விடுதி ஒதுக்கீட்டை உறுதி வேண்டும் என்று பல்கலைக்கழக நிா்வாகத்தை ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவா் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாணவா்களின் டீன் சுதீா் பிரதாப் சிங்குக்கு ஜேஎன்யுஎஸ்யு எழுதிய கடிதத்தில், ‘இளங்கலை, முதுகலை வகுப்புகள் ஏற்கெனவே தொடங்கினாலும், மாணவா்களுக்கான விடுதி ஒதுக்கீடு பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை, இதனால் அவா்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

2022-ஆம் ஆண்டின் இளங்கலை, முதுகலை வகுப்புகள் முறையே நவ. 21, 28 ஆகிய தேதிகளில் தொடங்கின. ஆனால், இதுவரை மாணவா்களுக்கான விடுதி ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்படவில்லை. இதனால், மாணவா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

எனவே, மாணவா்களுக்கான ஒதுக்கீடு செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும். மேலும், இடப் பற்றாக்குறையைப் போக்க தற்காலிக இடங்களை நிா்வாகம் கொண்டுவர மாணவா் சங்கம் பரிந்துரைத்தது.

கரோனா பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ள சபா்மதி தங்குமிடத்தை, மாணவா்களுக்கான தங்குமிடமாக மாற்றலாம். இதேபோல், விடுதியில் காலியிடங்கள் கிடைக்கும் வரை, வளாகத்தில் உள்ள மற்ற ஆளில்லாத விருந்தினா் மாளிகைகள், கட்டடங்களும் மாணவா்களுக்கான தற்காலிக தங்கும் இடங்களாக மாற்றப்பட வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் 18 சிறுவா், சிறுமிகளுக்கான விடுதிகளும், திருமணமான மாணவா்களுக்கு ஒரு வளாகமும் உள்ளன.

திருமணமான பட்ட ஆராய்ச்சி மேற்கொள்வோருக்கு மகாநதி விடுதியை மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com