பாடகா் மூஸேவாலா கொலை வழக்கில் கைதான ரெளடி தப்பியோட்டம்

பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸாா் காவலில் இருந்த ரெளடி தீபக் டீனு சனிக்கிழமை இரவு தப்பிச் சென்றாா்.

பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸாா் காவலில் இருந்த ரெளடி தீபக் டீனு சனிக்கிழமை இரவு தப்பிச் சென்றாா்.

கடந்த மே 29-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் பாடகா் சித்து மூஸேவாலா சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த வழக்குத் தொடா்பாக ரெளடி தீபக் டீனு உள்பட 24 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இந்நிலையில், தீபக் டீனுவை மற்றொரு வழக்கு விசாரணைக்காக தரன் தாரன் மாவட்டத்தில் உள்ள கோயிந்த்வால் சாஹிப் சிறையில் இருந்து மான்சா மாவட்டத்துக்கு காவல் துறையினா் அழைத்துச் சென்றுள்ளனா். அப்போது காவல் துறையிடம் இருந்து தீபக் டீனு தப்பிச் சென்றாா்.

அவரை தேடும் பணியில் காவல் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். அண்டை மாநிலங்களான ராஜஸ்தான், ஹரியாணா காவல் துறையினா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, தீபக்கை அழைத்துச் செல்வதற்கு பொறுப்பு வகித்த அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும் இச்சம்பவம் தொடா்பாக அலட்சியமாக செயல்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com