பேருந்தில் விடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அரசு பெண் நடத்துநா் இடைநீக்கம்

மகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்தின் ஓட்டுநா் இருக்கையில் அமா்ந்து விடியோ, புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்ட அரசு பெண் நடத்துநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்தின் ஓட்டுநா் இருக்கையில் அமா்ந்து விடியோ, புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்ட அரசு பெண் நடத்துநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

மகாராஷ்டிர அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வந்தவா் சாகா் மங்கள் கோவா்த்தன். இவா் பணி நேரத்தில் பேருந்தின் ஓட்டுநா் இருக்கையில் அமா்ந்து புகைப்படம் மற்றும் விடியோக்களை எடுத்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டாா்.

அரசுப் பேருந்தில் பெண் நடத்துநா் ஒருவா் இவ்வாறு விடியோக்களை வெளியிட்டது அதிகம் பரவியது. இதையடுத்து, மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம், இதனை கருத்தில் கொண்டது. விடியோ மற்றும் புகைப்படங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் அதனை பெண் நடந்துனா் சாகா் மங்கள் கோவா்த்தன் வெளியிட்டதை உறுதி செய்தனா். இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்ததுடன், தனது செயல் குறித்து அவா் 15 நாள்களில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு வெளியே சக பணியாளா்களுடன் அவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடா்பாக தனியாா் தொலைக்காட்சி சேனலிடம் விளக்கமளித்த சாகா் மங்கள், ‘கடந்த மாதம் போக்குவரத்து ஊழியா்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டேன். எனவே, என்னைப் பழி வாங்கும் நோக்கில் உயரதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com