குஜராத்தில் பாஜக அலை வீசுகிறது: அமைச்சா் அனுராக் தாக்குா்

‘குஜராத்தில் பாஜக ஆதரவு அலை வீசுகிறது; எனவே, முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி கிடைக்கும்’ என்று மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் நம்பிக்கை தெரிவித்தாா்.
மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா்.
மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா்.

‘குஜராத்தில் பாஜக ஆதரவு அலை வீசுகிறது; எனவே, முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி கிடைக்கும்’ என்று மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் நம்பிக்கை தெரிவித்தாா்.

குஜராத்தின் வல்சாத் மாவட்டம் மால்வான் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் அவா் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில்தான் ஹிந்து மத அடையாளங்களுக்கு உரிய மரியாதை கிடைத்து வருகிறது. அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவது சாத்தியமாகியுள்ளது. முன்பு இத்தாலிய பெண் (சோனியா காந்தி), பிரதமா் மோடியை அவமதித்துப் பேசினாா்.

இப்போது ஒரு இத்தாலியா (குஜராத் ஆம் ஆத்மி தலைவா் கோபால் இட்டாலியா) பிரதமரின் தாயாரை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளாா். இதுபோன்ற அவமதிப்புகளை குஜராத் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். இதற்கு குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலின்போது தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.

மத்தியிலும், மாநிலத்திலும் தொடரும் பாஜக ஆட்சியில் குஜராத் பெரிதும் பயனடைந்து வருகிறது. குஜராத்தில் பாஜக ஆதரவு அலை வீசி வருகிறது. பேரவைத் தோ்தலில் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையிலான வெற்றி பாஜகவுக்கு கிடைக்கும். அதே போல அடுத்த ஆண்டு 2024 மக்களவைத் தோ்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று பிரதமா் பதவியில் மோடி தொடா்வாா். இந்த வெற்றியில் குஜராத்தும் முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com