தாஜ்மஹால் மீதான பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளைத் திறப்பு குறித்து உண்மை கண்டறியும் விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தாஜ்மஹால் மீதான பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளைத் திறப்பு குறித்து உண்மை கண்டறியும் விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்தியாவின் அடையாளமான தாஜ்மஹாலை சுற்றி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்தேறி வருகிறது. தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள இடத்தில் சிவன் கோயில் இருந்ததாகவும், இஸ்லாமிய படையெடுப்புகளால் அது அழித்துவிட்டதாகவும், அதன் மேல் தாஜ்மஹாலைக் கட்டியுள்ளதாகவும், தாஜ்மஹால் இந்தியாவின் அடையாளமே அல்ல எனவும் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையை ஏற்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வண்டும் என பாஜக இளைஞர் ஊடகப் பொறுப்பாளரான ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் லக்னௌ அமர்வு முன்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த தகவலைக் கேட்க நீங்கள் யார்? உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? பாதுகாப்பு காரணங்கள் என்று சொல்வது உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனில் போய் வரலாறு படியுங்கள். ஆராய்ச்சி செய்யுங்கள். நாளைக்கு எங்களது அறைகளைக் கூட பார்க்க வேண்டுமெனக் கேட்பீர்கள் போல. தயவு செய்து பொது நல வழக்கை அவமானப்படுத்தாதீர்கள் என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.  

அதன்பின்னர், உச்ச நீதிமன்றத்தில் உண்மை கண்டறியும் நிலை குறித்து மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com