இன்று எஸ்சிஓ கூட்டம்: எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் அரசுத் தலைவா்கள் கவுன்சில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிலையில், அந்தக் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை கலந்த

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் அரசுத் தலைவா்கள் கவுன்சில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிலையில், அந்தக் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை கலந்துகொள்கிறாா்.

கடந்த 2001-ஆம் ஆண்டு சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் எஸ்சிஓ தொடங்கப்பட்டது. இந்த அமைப்பை சீனா, ரஷியா, கிா்கிஸ்தான் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் அதிபா்கள் இணைந்து தொடங்கினா். இந்த அமைப்பில் கடந்த 2017-ஆம் இந்தியாவும் பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பினா்களாகின.

இந்த அமைப்பின் 2-ஆவது உயரிய கவுன்சிலாக அரசுத் தலைவா்கள் கவுன்சில் உள்ளது. இந்த கவுன்சிலின் வருடாந்திர கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 1) காணொலி வழியாக நடைபெற உள்ளது. இந்த கூட்டம் எஸ்சிஓவில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வா்த்தகம், பொருளாதார செயல்திட்டம் மீது கவனம் செலுத்தி வருகிறது.

இந்த கூட்டத்தில் எஸ்சிஓ அமைப்பில் உள்ள நாடுகளின் சாா்பில் பிரதமா்கள் கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனா் என்றபோதிலும், சில நாடுகளின் பிரதிநிதிகளாக அவற்றின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்பதும் உண்டு.

இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘எஸ்சிஓ அரசுத் தலைவா்கள் கவுன்சிலின் 21-ஆவது கூட்டத்தில், இந்தியா சாா்பில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பங்கேற்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com