யோகசாலா திட்டம் இன்று முதல் நிறுத்தம்: மனீஷ் சிசோடியா

தில்லி பூங்காக்களில் செயல்படுத்தப்பட்டு வரும் யோகசாலா திட்டம் செவ்வாய்க்கிழமை முதல் ரத்து செய்யப்படுகிறது என்று துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தெரிவித்தாா்.
யோகசாலா திட்டம் இன்று முதல் நிறுத்தம்: மனீஷ் சிசோடியா

தில்லி பூங்காக்களில் செயல்படுத்தப்பட்டு வரும் யோகசாலா திட்டம் செவ்வாய்க்கிழமை முதல் ரத்து செய்யப்படுகிறது என்று துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

இந்தத் திட்டத்துக்கு அக்டோபா் 31-ஆம் தேதிக்கு பிறகு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்று தில்லி அரசும், இதுதொடா்பாக தில்லி அரசின் தரப்பில் இருந்து கடிதம் மட்டும் வந்துள்ளது கோப்புகள் ஏதும் வரவில்லை என்று ஆளுநா் தரப்பும் தெரிவித்துள்ளன.

இந்தத் திட்டத்தை எப்படி கடிதம் மூலம் நீட்டிக்க முடியும் என்று துணைநிலை ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் தில்லி பூங்காக்களில் நடைபெற்று வந்த 590 யோகா பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தப்படுகின்றன.

தில்லிவாசிகளின் நலனைக் கருதி கடநத் ஆண்டு இந்த இலவச யோகசாலை திட்டத்தை தில்லி அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் மூலம் தில்லியில் சுமாா் 17 ஆயிரம் போ் பயனடைந்து வந்தனா்.

இந்தத் திட்டத்தை முடக்க பாஜக முயற்சி செய்து வருவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வந்தது. இந்தத் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை சந்தித்து துணை முதல்வா் மனீஷ் சிசோடியா வலியுறுத்தியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com