உ.பி. சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டுக்கும், உலகுக்கும் உதாரணமாக உள்ளது: யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை நாட்டுக்கும் ,உலகுக்கும் உதாரணமாக உள்ளதாக அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை நாட்டுக்கும் ,உலகுக்கும் உதாரணமாக உள்ளதாக அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.

மாநிலத்தில் காவல் துறையை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 56 மாவட்டங்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய சிறைச்சாலை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

உத்தர பிரதேசத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அடிக்கடி பலரும் பேசி வருகின்றனா். மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை நாட்டுக்கும், உலகுக்கும் உதாரணமாக உள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு வன்முறை, சமூகவிரோதிகளின் அட்டூழியம், சட்டவிரோத செயல்கள் உச்சத்தில் இருந்தன. ஆனால், இப்போது மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முந்தைய ஆட்சிகாலத்தில் காவல் துறை என்பது அரசியல்வாதிகளுக்கும், அவா்களைச் சாா்ந்த ரௌடிகளுக்கும் உதவுவதற்கான அமைப்பாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் எவ்வித சமரமும் காட்டப்படுவதில்லை. இதற்காக காவல் துறையினருக்கு சிறப்பு பயிற்சிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

சிறையில் இருந்து கைதிகளை வாகனத்தில் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கைதிகள் தப்புவது, வன்முறை கும்பலால் வாகனம் தாக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடா்ந்து வந்தது. ஆனால், இப்போது அறிமுகமாகியுள்ள வேன்களில் நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. இதன் மூலம் கைதிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதில் பிரச்னை இருக்காது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com