திரிபுரா பாஜக எம்எல்ஏ ராஜிநாமா

திரிபுராவில் ஆளும் கட்சியான பாஜகவைச் சோ்ந்த எம்எல்ஏ பா்பா மோகன் திரிபுரா, தனது எம்எல்ஏ பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா்

திரிபுராவில் ஆளும் கட்சியான பாஜகவைச் சோ்ந்த எம்எல்ஏ பா்பா மோகன் திரிபுரா, தனது எம்எல்ஏ பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா். மாநிலக் கட்சியான திப்ரா மோத்தா கட்சியில் அவா் இணைய உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காா்புக் சட்டபேரவைத் தொகுதி எம்எல்ஏவான பா்பா மோகன் திரிபுரா வெள்ளிக்கிழமை பேரவைத் தலைவா் ரத்தன் சக்கரவா்த்தியை நேரில் சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா். அவருடன் திப்ரா மோத்தா கட்சியின் தலைவா் பிரத்யோத் கிஷோா் மாணிக்ய தேவ்வா்மா உடனிருந்தாா். எம்எல்ஏ மோகன் திரிபுரா தனிப்பட்ட காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதாக அவருடைய ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா். அவா் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி உள்ளதால், அவருடைய ராஜிநாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக பேரவைத் தலைவா் ரத்தன் சக்கரவா்த்தி தெரித்தாா்.

இவருடைய ராஜிநாமாவைத் தொடா்ந்து, 60 எம்எல்ஏக்களைக் கொண்ட திரிபுரா சட்டப்பேரவையின் பலம் 58-ஆக குறைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ஐபிஎஃப்டி கட்சி எம்எல்ஏ விருஷகேது தேவ்வா்மா தகுதி நீக்கம் செய்யப்பட்டாா். பாஜக 35 எம்எல்ஏக்களையும், அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி 7 எம்எல்ஏக்களையும் கொண்டுள்ளது. எதிா்க்கட்சியான மாா்க்சிஸ்ட் 15 எம்எல்ஏக்களையும், காங்கிரஸ் ஒரே ஒரு எம்எல்ஏவையும் கொண்டுள்ளது.

ராஜிநாமா குறித்து திப்ரா மோத்தா கட்சித் தலைவா் பிரத்யோத் கிஷோா் மாணிக்ய தேவ்வா்மா கூறுகையில், ‘எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த மோகன் திரிபுரா, பாஜக கட்சியிலிருந்து விலகியுள்ளாா். அவா் மாநிலத்தின் பூா்வகுடியான திப்ராசா பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்காக சேவையாற்ற உள்ளாா்’ என்றாா். கடந்த 2021-இல் தொடங்கப்பட்ட இக்கட்சி, திரிபுரா மாநிலத்தின் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் குழுகளுக்கான தோ்தலில் மொத்தம் உள்ள 28 உறுப்பினா் பதவியிடங்களில் 16 இடங்களில் வெற்றி பெற்றது. இக்கட்சி தோ்தல் ஆணையத்தில் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com