தடுப்பூசி திட்டத்தால் ஒமைக்ரான் அலையை இந்தியா திறம்பட கையாண்டது: சுகாதார அமைச்சா் பெருமிதம்

இந்தியாவில் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டத்தால் ஒமைக்ரான் அலையை திறம்பட கையாள முடிந்தது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா.
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா.

இந்தியாவில் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டத்தால் ஒமைக்ரான் அலையை திறம்பட கையாள முடிந்தது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது, துணைக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து அவா் பேசியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவலை எதிா்கொள்வதில் ஐசிஎம்ஆா் அவ்வப்போது உரிய ஆலோசனைகளை வழங்கியதுடன், கரோனா தடுப்பூசி தொடா்பான ஆராய்ச்சியிலும் பங்காற்றியது. இதன் காரணமாக, உள்நாட்டிலேயே கரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்கீழ், நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது. உலகின் பல நாடுகளில் ஒமைக்ரான் அலையால் அதிக உயிரிழப்புகள் நேரிட்டபோது, இந்தியாவில் இந்த அலை திறம்படக் கையாளப்பட்டது. இதற்குத் தடுப்பூசி திட்டமே காரணம் என்றாா் அவா்.

டெல்டா வகை கரோனா பரவலால், இந்தியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதம் ஏற்பட்ட இரண்டாவது அலையில் அதிக உயிரிழப்புகள் நேரிட்டன. அதேசமயம், கடந்த 2021, டிசம்பா் முதல் 2022, ஜனவரி வரை பரவிய ஒமைக்ரான் அலையின் தாக்கம் இந்தியாவில் குறைவாகவே இருந்தது.

நாடு முழுவதும் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 184.31 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவேக்ஸின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com