உகாதி பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

உகாதி, குடி பட்வா, சேத்தி சந்த், நவ்ரே, சைத்ர சுக்லாதி, சாஜிபு சிராவோபா பண்டிகைகளையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

உகாதி, குடி பட்வா, சேத்தி சந்த், நவ்ரே, சைத்ர சுக்லாதி, சாஜிபு சிராவோபா பண்டிகைகளையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘‘இந்தப் பண்டிகைகள் அனைவரின் வாழ்வில் அன்பு மற்றும் நல்லெண்ணத்தை வளா்க்கட்டும். தேசத்தை கட்டமைக்க புதிய உத்வேகத்துடன் நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து பங்களிப்போம்’’ என்று தெரிவித்துள்ளாா்.

குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘உகாதி, குடி பட்வா, சைத்ர சுக்லாதி, சேத்தி சந்த் பண்டிகைகள் நமது வாழ்வில் புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தட்டும்.

பல மாநிலங்களில் பலவகையான பாரம்பரிய வழிகளில் கொண்டாடப்படும் இந்த விழாக்கள், நமது வளமான பன்முகக் கலாசாரத்தை, அடிப்படை ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்றன’’ என்று தெரிவித்தாா்.

இந்தப் பண்டிகைகள் ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், மகாராஷ்டிரம், கொங்கணி பகுதியைச் சோ்ந்தவா்களின் பாரம்பரிய புத்தாண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிஸா தினம்-பிரதமா் வாழ்த்து:

ஒடிஸா தினத்தையொட்டி ஒடிஸா மக்களுக்குப் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவின் வளா்ச்சிக்கு ஒடியா மக்கள் சிறப்புமிக்க பங்களிப்பை வழங்கியுள்ளனா். ஒடியா கலாசாரம் உலகளவில் போற்றப்படுகிறது. ஒடிஸாவின் மேம்பாட்டுக்கு பிராா்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com